சுதாங்கன்
நாஞ்சில்நாடன்
பழனிபாரதி
அந்துமணி
ஆகியோரின் அணிந்துரை மற்றும் புகழுரைகளுடன்….
இது ஒரு யதார்த்தமான நகைச்சுவை நிறைந்த கட்டுரைத்தொகுப்பு.. அண்ணாச்சி வீட்டுக்கு வரும் நபர்களது வித்தியாசமான பிரச்னைகளும் அதன் தீர்வுகளும்..!
புத்தகத்திலிருந்து ஒரு பகுதி.. இதோ !
“அண்ணாச்சி இருக்காகளா? “
“ யாரது காலையிலேயே அண்ணாச்சியைத்தேடி வந்திருக்கது? “
“ யாரு ராவன்னா அண்ணனா? ஒண்ணுமில்லை சும்மா அண்ணாச்சியை பாத்திட்டுப்போகவந்தேன் “
“ ஒண்ணுமில்லேன்னா இங்க ஏன் வரப்போற? சும்மா காது குத்தாதலே! “
“அண்ணாச்சிக்கிட்ட சொல்லிட்டு போகலாம்னு வந்தேன் “
“ எங்கடே ரொம்ப தொ்லைவா போறியோ ? “
“இல்லே. ராவன்னா ! நான் சாகப்போறேன். அதான் அண்ணாச்சிக்கிட்ட சொல்லிட்டுப் போகலாம்னு வந்தேன். “
“அப்படிப்போடு. என்னமோ திருவனந்தபுரத்துக்கு போயிட்டு வர்றேங்கிறமாதிரில்ல சொல்லுதே ! கோட்டி பிடிச்சிருக்கா? சாகுதாராம்லே.. வெளங்காதவனே!
“ ரமய்யாண்ணே! ஒங்கள கையெடுத்து கும்புடுதேன். தயவுசெஞ்சு அண்ணாச்சிய கொஞ்சம் கூப்பிடுதேளா ? “
“ஆமடே ! நாங்கள்லாம் எல்லாத்தையும் காலெடுத்துக்கும்பிடுவோம். இவரு ஒருத்தருதான் கையெடுத்து கும்பிடுதாரு! சரிடே , எனக்கென்ன அவாளயே கூப்பிடுதேன். சொல்லிக்கிட்டு ஜாம்ஜாம்னு போய்ச்சேரும். “
குறுக்குத்துறை ரகசியங்கள்
பெப்ரவரி 27, 2008 thamizhkadal ஆல்


